முகப்பு
திருவண்ணாமலை

அணையைத் திறந்தால் 12,543 ஏக்கர் பாசன வசதி பெறும்

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 12,543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 4 ஜனவரி 2013, 4:24 am IST
பகிர்:

 சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 12,543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இதில், 7,321 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். அணையில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 89 அடி உயரத்துக்கு 2,342 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நீரில், அடிப்படைத் தேவை, குடிநீர் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நீர் அளவு, அணையில் ஏற்பட்ட மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள இழப்பு, நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்காக மொத்தம் 1,364 மில்லியன் கன அடி தண்ணீர் தேவை. மீதமுள்ள 978 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விட முடியும்.

Advertisement

இதில், திருக்கோயிலூர் பழைய ஆயக்கட்டு பாசனப் பரப்புக்கான உரிமை நீர் 432 மில்லியன் கன அடி தண்ணீரை கண்டிப்பாக விட வேண்டும். இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மீதமுள்ள 546 மில்லியன் கன அடி தண்ணீரை அணையின் இடது மற்றும் வலதுப்புற கால்வாய்கள் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்குத் திறந்து விடலாம்.

அணை திறப்பதன் மூலம் மொத்தம் 12,543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை நிர்வள ஆதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.