முகப்பு
திருவண்ணாமலை

தவறான நிர்வாகத்தால் டீசலை வீணாக்கும் அரசு பஸ்கள்

டீசல் விலை ஏற்றத்தால் அல்லல்படும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை

தவறான நிர்வாகத்தால் டீசலை வீணாக்கும் அரசு பஸ்கள்

டீசல் விலை ஏற்றத்தால் அல்லல்படும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

டீசல் விலை ஏற்றத்தால் அல்லல்படும் நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இருக்க, மறுபுறம் டீசலை வீணாக்கும் நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை, கும்பகோணம், சேலம், நெல்லை ஆகிய 7 கோட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வீணாக இயக்கப்படும் பஸ்கள்: காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து தடம் எண் 438 காஞ்சிபுரம் - சேலம் செல்லும் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முதலில் இயக்கப்பட்டன.

நிர்வாகக் குளறுபடியால், இவை திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் அமைந்துள்ளன என்று கூறி காஞ்சிபுரம் - சேலம் பேருந்துகள் காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து பெறப்பட்டு திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தைச் சேர்ந்த செய்யாறு கிளை மூலம் சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

செய்யாறு கிளையில்...: இவ்வாறு பெறப்பட்ட தடம் எண் 438 பேருந்துகள், செய்யாறில் இருந்து காஞ்சிபுரத்துக்கு இயக்கப்பட்டு பின்னர் காஞ்சிபுரம் - சேலம் தடத்தில் இயக்கப்படுகின்றன. பின்னர் ஊழியர்கள் டூட்டி மாறுதல், டீசல் பிடித்தல் போன்ற நிர்வாகக் காரணங்களுக்காக செய்யாறு வரையில் கட் சர்வீஸôக இயக்கப்படும் இந்த பஸ்களில் பயணம் செய்கின்ற பயணிகள் எண்ணிக்கையோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே உள்ளனர்.

30 கி.மீ. தூரத்தில் உள்ள செய்யாறுக்கு வந்து, மீண்டும் காஞ்சிபுரத்துக்கு சென்று வருவதால் 60 கி.மீ. தூரத்துக்கு ஒரு பஸ்ஸýக்கு 12 லிட்டருக்கு மேல் டீசல் வீணாகச் செலவாகிறது. இவ்வாறு சேலத்துக்கு ஏழு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, தடம் எண் 555-ம் 80 கி.மீ. தூரம் தேவையில்லாமல் இயக்கப்படுவதால், இந்த பஸ்ஸýக்கு நாளொன்றுக்கு சுமார் 16 லிட்டர் டீசல் செலவாகிறது. மேலும், அதிக கி.மீ. ஓட்டியதற்காக டிரைவர், கண்டக்டருக்கு "ஓவர்டைம் பேட்டா'வும் வழங்கப்படுவதாகத் தெரிகிறது.

செய்யாறு பணிமனையில் இருந்து ஒசூருக்கு இயக்கப்படும் தடம் எண் 303எச், 444 ஆகிய இரு பஸ்களும் காலை நேரத்தில் செய்யாறில் இருந்து வந்தவாசிக்கு காலியாகவே இயக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பேருந்துக்கும் 50 கி. மீ.க்கு 10 லிட்டர் டீசல் வீணாகச் செலவாகிறதாம்.

வந்தவாசி கிளையில்...: வந்தவாசி கிளையில் இருந்து காஞ்சிபுரம் - சேலம் என நான்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களும்  வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் சென்று பின்னர் காஞ்சிபுரம் - சேலம் என இயக்கப்படுகின்றன, ஒவ்வொரு பஸ்ஸýக்கும் ஒவ்வொரு நாளும் 80 கி.மீ.க்கு 16  லிட்டருக்கு மேல் டீசல் வீணாகச் செலவாகிறது.

போளூரில் இருந்து இயக்கப்படும் சில பஸ்களாலும் இதுபோன்று டீசல் வீணாகச் செலவாகிறது.

தேவையில்லாத நிர்வாகக் குளறுபடியால், செய்யாறு கிளையில் மட்டும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் சுமார் 200 லிட்டருக்கு மேல் டீசல் வீணாகச் செலவாகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.11 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். டீசல் விரயமாவதுடன் தினமும் பஸ் ஊழியர்களுக்கு சுமார் ரூ.1000-க்கு மேல் "ஓவர் டைம் பேட்டா'வும் வழங்கப்படுகிறது.

நேரடியாக இயக்கக் கோரிக்கை: காஞ்சிபுரம் - சேலம் பஸ்களை காஞ்சிபுரத்தில் இருந்தோ, சேலத்தில் இருந்தோ இயக்க வேண்டும். தடம் எண் 333எச், 444 ஆகிய பஸ்களை வந்தவாசி பணிமனையில் இருந்து நேரடியாக ஒசூருக்கு இயக்க வேண்டும்.

காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து செய்யாறு வரையில் இயக்கப்பட்டு பின்னர் செய்யாறு - திருப்பதி என இயக்கப்படும் தடம் எண் 212எச் பஸ்ûஸ செய்யாறில் இருந்தும், தடம் எண் 555 திருச்சி பஸ்ûஸ ஆற்காட்டில் இருந்தும், ஆற்காட்டில் இருந்து வேலூர் - மேல்மருவத்தூர் என இயக்கப்படும் தடம் 200 பஸ்களை வந்தவாசியில் இருந்தும், புதுச்சேரி - திருப்பதி செல்லும் தடம் எண் 187 பஸ்ûஸ செய்யாறு வழியாக புதுச்சேரியில் இருந்து நேரடியாக இயக்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபோன்று அரசு பஸ்களை நேரடியாக இயக்கினால் தேவையில்லாமல் வீணாகச் செலவாகும் டீசலை சேமிக்கலாம். பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் "ஓ.டி. பேட்டா'வையும் தவிர்க்கலாம். இலக்கைவிட அதிக கி.மீ. தூரத்துக்கு தொடர்ந்து பஸ்களை இயக்குவதால் பணிபளு காரணமாக ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து பயணி வில்வபதி பழனி என்பவர் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் செய்யாறு. காஞ்சிபுரத்திலே பணிபுரிகிறேன். தினமும் காலையில் காஞ்சிபுரம் சென்று இரவு செய்யாறுக்கு வருவேன். வரும்போது செய்யாறு வரை வரும் சேலம் பஸ்ஸில் வாரத்துக்கு 3, 4 முறை வருவேன். பஸ்ஸில் அதிகபட்சமாக 15 பேருக்கு மேல் வந்ததில்லை என்கிறார்.

செய்யாறில் வசிக்கும் பூ வியாபாரி மனோகர் என்பவரும் இதே கருத்தைக் கூறினார்.

இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்க சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் எம்.தாமோதரன் கூறியதாவது:

சேலம் பஸ்களை செய்யாறில் இருந்து ஓட்டுவதனால், பணி பளு காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் கிலோ மீட்டரை நீட்டித்து பஸ்களை ஓட்டுவதால் நிர்வாகத்துக்கு டீசல் இழப்பு, விபத்து காலங்களில் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. "ஓவர்டைம்'க்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் வாங்குவதை விட 8 மணி நேரம் டூட்டி பார்ப்பதே போதுமானது என்கிறார்.

டீசலை சேமிப்பதற்காக ஓட்டுனர்களுக்கு உரிய பயிற்சி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்டு வருவதுடன், சாலைகளில் ஒரே சீரான வேகத்தில் பஸ்களை ஓட்டுவது, அடிக்கடி கியர் போடாமல் ஓட்டுவது போன்ற பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

டீசல் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் அரசு பஸ்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில்,  டீசலை வீணாக்கி போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் கட் சர்வீஸ் பஸ்களை தவிர்க்கலாமே? போக்குவரத்துக் கழகம் கவனிக்குமா?

முழு கட்டுரையைப் படிக்க →