முகப்பு
திருவண்ணாமலை

அழிவின் விளிம்பில் "கற்பக விருட்சங்கள்'!

கற்பக விருட்சங்களாகக் கருதப்படும் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை

அழிவின் விளிம்பில் "கற்பக விருட்சங்கள்'!

கற்பக விருட்சங்களாகக் கருதப்படும் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

கற்பக விருட்சங்களாகக் கருதப்படும் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

தமிழகத்தின் அடையாளமாக உள்ள பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனை மரங்கள் மூலம் கருப்பட்டி வெல்லம், பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, கிழங்கு ஆகிய உணவுப் பொருள்களும், விசிறி, ஓலை, பாய், ஓலைப் பெட்டி, நார்ப் பெட்டி, கட்டில், உத்திரம் போன்ற இதர பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

பண்டையக் காலங்களில் பனை ஓலை வேய்ந்த குடிசை வீடுகளில் நம் முன்னோர் குளிர்ச்சியாகவும், சுகாதாரமாகவும் வசித்து வந்தனர். அதேபோல தமிழ் இலக்கியங்கள், சித்த மருத்துவக் குறிப்புகள் போன்றவையும் பனை ஓலை நறுக்குகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டு வந்தன. விவசாயிகள் தங்களின் வயலுக்கு பனஞ்சோலைகளை அமைத்து வேலிகளாகப் பயன்படுத்துகின்றனர். ஏரிக் கரைகளுக்கு அரணாக பனைமரங்களை பாதுகாப்புக்கு வைத்து வளர்த்து வந்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் பனை மரங்கள் உபயோகப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக இவை அழிவின் விளிம்பில் தத்தளிக்கின்றன. பனை சாகுபடித் தொழிலின் அழிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சொந்த மரமில்லாதவர்களும் பனைமரம் ஏறுபவர்களும் வேறு தொழிலுக்கு மாறியதும், பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட வறட்சி, சீமைக் கருவேல மரங்களின் அபார வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களாலும் பனை மரங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்தது.

இந்த நிலையில் சுமார் 15 வருடங்களுக்கு மேல் வளர்ந்து எஞ்சியுள்ள சில பனை மரங்களை, சொற்பத் தொகைக்கு ஆசைப்பட்டு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெட்டி அழித்து வருகின்றனர்.

அத்தி, ஆலம், மருதம், இலுப்பை, நாவல் போன்ற பாரம்பரிய மரங்களை நாம் இழந்து வரும் நிலையில், தமிழக அரசுச் சின்னங்களில் மாநில மரமாக இடம் பெற்றிருக்கும் பனை மரமும் நசிந்து வருகிறது. எனவே, விறகுக்காகவும், செங்கல் சூளைக்கு எரிபொருளாகவும் பனைமரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →