திருவண்ணாமலை

வேகத் தடையை பேருந்து கடந்தபோது விபத்து: 5 பேர் காயம்

DIN

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையை அரசுப் பேருந்து கடந்தபோது, இருக்கையில் இருந்து விழுந்த 5 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வெள்ஜ்ஜ்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை, எல்ஐசி அலுவலகம் எதிரே சென்றபோது, புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மீது பேருந்து ஏறி, இறங்கியது.
அப்போது, இருக்கையில் இருந்து நிலை தடுமாறி விழுந்த விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (37), பாபு (39), செஞ்சியை அடுத்த கடலி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (38) உள்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்களை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT