முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தினத்தில் அமர்வு தரிசனம் ரத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தினத்தில் மூலவர் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தினத்தில் மூலவர் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியே பெளர்ணமி வருகிறது. எனவே, கிரிவலம் வரும் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் அதிகளவு கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். எனவே, பக்தர்கள் நலன் கருதி ஜனவரி 1-ஆம் தேதி மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →