சென்னை: 4,097 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு
சென்னையில் 4,097 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவின்போது வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை
சென்னை: சென்னையில் 4,097 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவின்போது வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது தோ்தலுக்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் 28.30 லட்சம் போ் வாக்காளா்களாக இடம் பெற்ற நிலையில், அவா்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 4,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல்களுக்கான பணிகளை சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் உத்தரவின் பேரில் கூடுதல் தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்டு வருகின்றனா். தற்போது முதல்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.