திருவண்ணாமலை

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

DIN

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் 47-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை காந்தி சிலை எதிரே நடைபெற்ற விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவர் என்.வெற்றிசெல்வம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஜி.அண்ணாச்சி, நகரத் துணைத் தலைவர்கள் எம்.சி.மனோகரன், டி.குப்பன், நகர சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஏழை, எளியோருக்கு காங்கிரஸ் நிர்வாகி என்.சின்னதுரை அன்னதானம், இனிப்புகளை வழங்கினார். மாவட்ட பொதுச் செயலர்கள் ஆர்.ஏ.குமரேசன், கதிர்காமன், என்.பிச்சாண்டி, டி.சண்முகம், நகர மகளிரணித் தலைவி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணியில்...: ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தார். தொடர்ந்து, ஆரணி வடக்கு மாட வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
இதனையடுத்து, ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், 200 பேருக்கு மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன. அங்கு கேக் வெட்டி ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் டி.பி.ஜெ.ராஜாபாபு, மாவட்டப் பொறுப்பாளர்கள் கப்பல் இ.கங்காதரன், ஏ.ஆர்.அசோக்குமார், மருத்துவர் வாசுதேவன், பி.கே.ஜி.பாபு, யு.அருணகிரி, ஜெயவேலு, தெள்ளூர் சேகர், பிரசாத், முருகன், ராமலிங்கம், கே.ஆர்.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT