திருவண்ணாமலை

சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 230 பேர் கைது

ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 230 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 230 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்.
போராட்டத்தின்போது, சத்துணவுத் திட்டத்துக்கு தனி துறையை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 8-ஆவது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். சத்துணவுத் துறையில் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற சத்தணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 230 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT