திருவண்ணாமலை

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரிக்கை

DIN

திருவண்ணாமலை அருகே நீண்ட காலமாக நிலவும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என, நரிக்குறவ மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வானாபுரம் அடுத்த மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஓம்சக்தி நகரில் 65-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றன. இவர்களுக்கு 2 ஆழ்துளைக் கிணறுகள், 2 சிறு மின் விசைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறுகளும் சிறு மின் விசைத் தொட்டிகளும் ஓர் ஆண்டுக்கு முன்னரே பழுதானதாம். இதை ஊராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், போதிய குடிநீர் கிடைக்காமல் நரிக்குறவர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
எனவே, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி அவர்கள், அந்த நலச் சங்கத்தின் தலைவர் தேவா தலைமையில் மாவட்ட ஆட்சியர், தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, வேறு வழியின்றி 2 நாள்களுக்கு ஒருமுறை ரூ. 700 கொடுத்து லாரி மூலம் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனராம். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT