திருவண்ணாமலை

போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த மாடுகள் அகற்றம்: உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம்

DIN

செங்கம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ. 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.
செங்கம் நகரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், காய்கனி அங்காடி, உழவர் சந்தை, துக்காப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும், அங்காடிக்குள் புகுந்து காய், கனிகள், காய்கறிகளை உண்பதால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர், சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை வியாழக்
கிழமை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதித்தனர். மேலும், இனிமேல் சாலைகளில் மாடுகளை அவிழ்த்துவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT