பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம்
வந்தவாசி நகர பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் எதிரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
வந்தவாசி நகர பாஜக சார்பில் கருப்புப் பண ஒழிப்பு வெற்றி தினம் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் எதிரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதியன்று உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து பாஜகவினர் இந்த வெற்றி தினத்தை கொண்டாடினர். இதையொட்டி, பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வி.குருலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை நாடார், கலை இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவர் முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகணேசன், நகரச் செயலர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர்கள் அரிகிருஷ்ணன், பச்சையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.