திருவண்ணாமலை

மணல் திருட்டைத் தடுக்க வலியுறுத்தல்

DIN

குடியாத்தம் அருகே கௌன்டன்யா ஆற்றில் அனுமதியின்றி மணலை அள்ளி, அங்கேயே ஜலித்து எடுத்துச் செல்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
 குடியாத்தம் அருகே போடிப்பேட்டையில் கௌன்டன்யா ஆற்றில் சமூக விரோதிகள் ஆங்காங்கே கிணறு போல் பள்ளங்கள் தோண்டி மணல் எடுத்து, அதை அங்கேயே ஜலித்து எடுத்துச் செல்கின்றனர். போடிப்பேட்டையில் உள்ள நகராட்சி நீர் ஏற்றும் நிலையம் அருகிலும் மணல் அள்ளப்படுகிறது. இதனால், ஆற்றில் இருந்து நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து அவர்களிடம் அப்பகுதி மக்கள் கேட்டால், கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நெல்லூர்பேட்டை அருகே, அப்பகுதி மக்கள் பல முறை சாலை மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளிக்கும் அதிகாரிகள், பின்னர் இதைக் கண்டு கொள்வதில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, அந்தப் பகுதியில் தொடரும் மணல் திருட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT