திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

செய்யாறை அடுத்த செங்காடு பகுதியில் மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் செங்காடு அரசு
மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.பெருமாள் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் கே.அன்பரசு, சிறப்பாசிரியர் எம்.பூச்செண்டு, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அரசு செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின்போது, எட்டாம் வகுப்பு முடித்தவுடன் இடை நிற்காமல் தொடர்ந்து 9-ஆம் வகுப்பு பயில மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT