திருவண்ணாமலை

அனக்காவூர் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் முகாம்

DIN

செய்யாறை அடுத்த அனக்காவூர் வட்டாரத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் முகாமிட்டு வேளாண் பணிகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான ஜி.கோகுல், எஸ்.ஜெகதீஸ், வி.கலைச்செல்வன், கே.எஸ்.மோகன், கே.ஸ்ராவன்குமார்,  எம்.கிருஷ்ணராஜ், டி.கிருஷ்ணகாந்த்,  எம்.திருப்பதி ஆகியோர் அடங்கிய குழுவினர் வேளாண் அனுபவப் பயிற்சியாக சுமார் 2 மாதங்களாக அனக்காவூர் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் புதன்கிழமை கோவிலூர் கிராமத்தில் அனக்காவூர் வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி மேற்பார்வையில், பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து, வியாழக்கிழமை கோவிலூர் அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின்போது, செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் அதிக மகசூல் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT