சிறப்பு கிராம சபைக் கூட்டம்
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும், பதிவேடுகள், கிராம வரவு - செலவு கணக்குகள் குறித்தும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சியில் முழுமை பெறாத தனி நபர் இல்லக் கழிவறை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
தனி நபர் இல்லக் கழிவறை திட்டத்தை முழுமையாக செய்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாதேவி, வட்டார வள அலுவலர் ரங்கராஜ், கௌரவத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சிச் செயலர் சங்கர், கிராம மக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.