திருவண்ணாமலை

மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

தினமணி

திருவண்ணாமலையில் வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமியை போலீஸார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 திருவண்ணாமலை நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 13 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டிருந்தார்.
 அந்தச் சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் செங்கத்தை அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததும் தெரியவந்தது. வீட்டுக்கு மீண்டும் செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை போலீஸார் மீட்டு, பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT