திருவண்ணாமலை

3 நிமிடங்களில் 103 யோகாசனங்கள் செய்து பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி

DIN


திருவண்ணாமலையில் 6-ஆம் வகுப்பு மாணவி 3 நிமிடங்களில் 103 யோகாசனங்களை செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த தனியார் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி மிஷ்தி (13). கடந்த 3 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வந்தார். இவர், 3 நிமிடங்களில் 103 யோகாசனங்களை செய்து காண்பித்து சனிக்கிழமை கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. யுனிவர்சல் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட் நிறுவன நடுவர்கள் பங்கேற்று இந்த சாதனையை பார்வையிட்டனர். இதுவரை 3 நிமிடங்களில் 85 யோகா செய்தது உலக சாதனையாக உள்ளது.
மாணவியின் சாதனை விடியோ பதிவு செய்யப்பட்டு, சாதனை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT