திருவண்ணாமலை

இலவச பல் சிகிச்சை முகாம்

DIN


திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், செந்தமிழ் அறக்கட்டளை, லட்சுமி பல் மருத்துவமணை இணைந்து இலவச பல் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். செந்தமிழ் அறக்கட்டளைத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகி மண்ணுலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினார்.
முகாமில், பல் பாதுகாப்பு, பல் துலக்கும் முறை, பல் ஈரல் பிரச்னைகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு பல் மருத்துவர் பாலமுருகன் பதில் அளித்துப் பேசினார். பின்னர், ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சண்முகம் பள்ளி நூலகத்துக்கு நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
இதில், லயன்ஸ் சங்க நிர்வாகி செந்தில்குமார், நல் நூலகர் சாயிராம், ஆசிரியர் அயூப்கான், செந்தமிழ் அறக்கட்டளை புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில்,
350 மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT