முகப்பு
திருவண்ணாமலை

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மர வியாபாரி சாவு

செய்யாறு அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மர வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

செய்யாறு அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மர வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறை அடுத்த கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மர வியாபாரி சுப்ரமணி (65). இவர், கிராமத்தில் வாங்கிய மரங்களை சனிக்கிழமை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் இருந்து மரக்கிளை முறிந்து விழுந்ததில் சுப்ரமணி பலத்த காயமடைந்தார்.
பின்னர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 
இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்ரமணி, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →