திருவண்ணாமலை

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு 

தினமணி

திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் குமரன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களின் சிறப்பு முகாம் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். இயக்குநர் பொன்.முத்து முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
 முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.ஜி.பொன்முடி, என்.எ.கே.அய்யனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
 முகாம் நாள்களில் பள்ளி, கோயில், தெருக்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜெயவேல், ஜெய்கணேஷ், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT