திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றம்

DIN

வேட்டவலம் அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
வேட்டவலம் - திருவண்ணாமலை இடையே மங்களூர் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கூட்டுச் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏராளமானோர் வீடுகள், கடைகள் கட்டி இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சுகுணா தலைமையில் நடைபெற்றது. 
அப்போது, வேட்டவலம் காவல் ஆய்வாளர் (பொ) சந்திரசேகர், உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT