முகப்பு
திருவண்ணாமலை

பாஞ்சாலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பங்கேற்பு

ஆரணியை அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாஞ்சாலிஅம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 மே, 2018 at 4:27 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ஆரணியை அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாஞ்சாலிஅம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு விழாக் குழுவினர் வரவேற்பளித்தனர்.
இதில், வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றிய அதிமுக செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பேரவை நிர்வாகி பாரிபாபு, மாவட்ட பாசறை செயலர் ஜி.வி.கஜேந்திரன், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் கோயிலில் அக்னி வசந்த விழா தொடங்கியது. விழாவுக்கான ஏற்பாடுகளை இரும்பேடு மதுரா பூண்டி கிராம
மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.