முகப்பு
கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் தொடரின் 24ஆவது போட்டியில் மோதும் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் குறித்து...

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:54 pm IST
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள். - படம்: ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் தொடரின் 24ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே திடலில் மோதுகின்றன.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டிகளில் 3ல் வென்று, ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடைசி போட்டியில் ரோஹித் சர்மா ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

Advertisement

Advertisement

கடந்த சீசனில் பிளே-ஆஃப்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. பஞ்சாப் இறுதிப் போட்டியில் ஆர்சிபியிடம் தோற்றது. ஒருவேளை மும்பை அணி இறுதிப் போட்டிக்குச் சென்றிருந்தால் வென்றிருக்கும் என அப்போது பல விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த சீசனில் தோல்வியுற்றதுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

summary

Will Mumbai Indians exact revenge on Punjab Kings in IPL 2026?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments