திருவண்ணாமலை

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

DIN

கீழ்பென்னாத்தூர் அருகே புகாரை வாபஸ் வாங்கக் கோரி மிரட்டும் பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொழிலாளி புகார் அளித்தார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைத் தொழிலாளி ராஜூ (54). இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு அருகே ஒரு கும்பல் சாராய விற்பனையில் ஈடுபடுகிறதாம். இதுகுறித்து ராஜூ தொலைபேசி மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கீழ்பென்னாத்துôர் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில், 4 போலீஸார் உள்பட 5 பேர் ராஜூவின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று துôங்கிக்கொண்டிருந்த ராஜூவைத் தாக்கினராம். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ராஜூ, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவேன் என்றும் ராஜூவை காவல் ஆய்வாளர் கவிதா மிரட்டினாராம். 
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜூ செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT