திருவண்ணாமலை

தீபத் திருவிழாவின் நான்காம் நாள்: நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அன்று முதல் தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், சிம்ம வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நாக வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து மீண்டும் கோயில் எதிரில் நிலைக்கு வந்தடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT