நீட் தேர்வு பயிற்சி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
செங்கம் அருகே காஞ்சியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
செங்கம் அருகே காஞ்சியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
செங்கத்தை அடுத்த காஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாலை வேளையிலும், விடுமுறை நாள்களிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்களிடம் பயிற்சி வகுப்புக்குப் போதுமான இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், ஆசிரியர்களிடம் நீட் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் நேரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்களிடம் இந்தப் பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக உள்ளதா என கேட்டறிந்ததுடன், மழை நேரங்களில் கூடுதல் பயிற்சி வகுப்பு தேவைபட்டால், உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
உடன், செங்கம் வட்டாட்சியர் ரேணுகா, பாய்ச்சல் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பயிற்சி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் உடனிருந்தனர்.