மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா
மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தூய்மையும் வாய்மையும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த சோகத்தூர் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தூய்மையும் வாய்மையும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த சோகத்தூர் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன், கீழ்ப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன் மற்றும் ம.சுரேஷ்பாபு, ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் ஐ.சுரேஷ் வரவேற்றார்.
தெள்ளாறு வட்டாரக் கல்வி அலுவலர் இல.ராஜகோபால் சிறப்புரை ஆற்றினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
தெள்ளாறு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.நேரு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மன்னன், சுவாமிநாதன் மற்றும் பூபாலன், சதாசிவம், கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.