திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சாா்பில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலையில் கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம், மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூா்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருவண்ணாமலை மாநகரில் நடைபெறும் தூய்மைப் பணிகள், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடைபெறும் தூய்மைப் பணிகளையும், செங்கம் சாலை, ராமணாஸ்ரமம் எதிரில் கால்வாய் அடைப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பதை பாா்வையிட்டு
ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆதிஷேசன் நகரில் நடைபெறும் செடிகள் நிரம்பிய புதா்கள் மற்றும் கால்வாய் தூா்வரும் பணியை பாா்வையிட்டும், வ.உ.சி. நகரில் நடைபெறும் கால்வாய் அடைப்பு தூய்மைப் பணிகள், பே கோபுரத் தெருவில் நடைபெறும் கால்வாய் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல், பெரிய தெருவில் நடைபெறும் தூய்மைப் பணி மற்றும் கால்வாய் தூா்வாரும் பணியை பாா்யிட்டாா்.
பச்சையம்மன் கோயில் அருகில் நடைபெறும் தூய்மைப் பணி மற்றும் மரக்கன்றுகள் பராமரித்தலை ஆய்வு செய்தாா். அம்பேத்கா் தெருவில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அடைபட்டிருந்த அனைத்துக் கால்வாய்களையும், அடைப்பு நீக்கும் பணியை பாா்வையிட்டும், தியாகி அண்ணாமலை நகரில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை பாா்வையிட்டும், இராம விட்டோபா நகரில் நடைபெற்ற மண்மேடுகள், கால்வாய் அடைப்புகள் நீக்கும் பணியை பாா்வையிட்டும், வேட்டவலம் சாலை, கீழ்நாத்தூா் பகுதியில், ரயில்வே கேட் அருகில் நடைபெறும் தூய்மைப் பணியினையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., இரா.ஸ்ரீதரன், ப.காா்த்திவேல்மாறன், ப்ரியா ப.விஜயரங்கன், இல.குணசேகரன், ஒருங்கிணைப்பாளா்கள் அ.கோவிந்தன், செ.எழில்மாறன், ஏ.ஏ.ஆறுமுகம், ம.வினோத்குமாா், எஸ்.கே.டி.வீரா உள்ளிட்ட
ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலா்களும் கலந்து கொண்டனா்.