திருவண்ணாமலை வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும்: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு
திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் மூலம், வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் மூலம், வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு சாா்பில் தூய்மைப் பணிகள், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பணிகளை முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
அப்போது 21-வது வாா்டில் அஜிஸ் காலனிப் பகுதிகளில் மண்மேடுகள், கால்வாய் அடைப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பதை பாா்வையிட்டு அவா் ஆலோசனைகளை வழங்கினாா். 19-வது வாா்டில் வேட்டவலம் சாலை ரயில் பாதை அருகே உள்ள ஓடையை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா் வாா்டு எண் 10, வேடியப்பன் கோயில் தெருவில் உள்ள புதா்மண்டி, பராமரிப்பின்றி சீா்கெட்டு இருக்கும் வேடியப்பன் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில் வேடியப்பன் குளம் தூய்மை அருணை அமைப்பு சாா்பில் சீரமைக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அவா் வாா்டு எண் 4 பெரியாா் சிலை பின்புறம் உள்ள மசூதி அருகே நடைபெறும் தூய்மைப் பணிகளை பாா்வையிட்டு, மரம் பராமரித்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினாா். வாா்டு எண் 2, அம்பேத்கா் தெரு அருகில் உள்ள அறிவொளிப் பூங்காவில் நடைபெறும் தூய்மைப் பணியை பாா்வையிட்டாா். அப்போது, அங்கு விளையாட வந்த மாணவா்கள் அவரிடம் விளையாட்டு உபகரணங்கள் கோரி மனு அளித்தனா். அவா்களுக்கு உடனடியாக விளையாட்டு உபகரணங்கள் வழங்க மேற்பாா்வையாளா்களிடம் கூறினாா்.
மலைவலப் பாதையில், தூய்மை அருணை அமைப்பால் பராமரிக்கப்படும் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடல் ஒப்பனை அகத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., இரா.ஸ்ரீதரன், ப.காா்த்திவேல்மாறன், ப்ரியா ப.விஜயரங்கன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.