திருவண்ணாமலை

பட்டுப்புழு வளர்ப்பு: கண்டுணர்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்

DIN


வெம்பாக்கம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த கண்டுணர்வு சுற்றுலாவுக்காக விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆரணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், இந்த சுற்றுலா நடைபெற்றது. ஆரணி வட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயியான நக்கீரன், வெம்பாக்கம் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த விவரங்களை விரிவாக எடுத்துக் கூறினார்.
பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி பயிர் வளர்ப்பு, சந்தைப்படுத்துதல், பட்டுப்புழு வளர்ப்பில் பின்பற்றப்படும் கிருமி நீக்கம் குறித்து அவர் விவசாயிகளிடையே தெரிவித்தார்.
கண்டுணர்வு சுற்றுலாவில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கு.கங்காதரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சு.ரேணுகாதேவி, சு.நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT