திருவண்ணாமலை

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

DIN

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பூஷன் அபியான் திட்டத்தின் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவிகள், வளரிளம் பெண்கள் பச்சைக் காய்கனிகள், அரிசி சாதம், பருப்பு வகைகள் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
உணவு உண்பதற்கு முன்பு கைகளை சோப்புப்போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். குளித்த பிறகு, துவைத்த ஆடைகளை அணிந்து தூய்மையாக இருக்க வேண்டும். யோகா உள்ளிட்ட உடல் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுலு, மகளிர் திட்ட வழி நடத்துநர்கள், ஊட்டச்சத்து மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT