திருவண்ணாமலை

சேத்துப்பட்டு அருகே2 பள்ளிகளில் இணைய வழி கற்றல், கற்பித்தல் பயிற்சி தொடக்கம்

DIN


சேத்தப்பட்டு அருகே 2 பள்ளிகளில் இணையவழி கற்றல், கற்பித்தல் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள செம்மாம்பாடி, அன்மருதை, கோழிப்புலியூர், மேல்சாத்தமங்கலம் ஆகிய பள்ளிகளில் இணையவழி கற்றல், கற்பித்தல் பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இந்தக் கல்வி முறையில் பல்வேறு போட்டிகள், தேர்வுகளை நடத்தியதில் செம்மாம்பாடி பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெங்களூரில் அவர்களுக்கு பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழாண்டு அனாதிமங்கலம், கோனாமங்கலம், தவணி, நம்பேடு, அரசம்பட்டு, விளாநல்லூர்ஆகிய பள்ளிகளில் இணையவழி கற்றல், கற்பித்தல் பயிற்சி தொடங்கப்படுகிறது.
இந்த நிலையில், கோனாமங்கலம், அனாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இணையவழி கற்றல், கற்பித்தல் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெரணமல்லூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, கலாவதி, தலைமையாசிரியர்கள் தேவகி, சரஸ்வதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நம்பிராஜன் நன்றி கூறினார்.
அனாதிமங்கலம், கோனாமங்கலம் பள்ளிகளில் பெங்களூரு வித்யலோகா, எல்டிஐஆர்ஆர்பி மற்றும் சுவாடு தொண்டு நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT