திருவண்ணாமலை

மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்து: சண்முகா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

DIN


: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
திருவண்ணாமலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவிகள் முதல், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
குறிப்பாக, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.ராகினி முதலிடம் பிடித்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் வென்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர் எ.அருணாச்சலம், முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் மற்றும் பேராசிரியர்கள் சனிக்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT