திருவண்ணாமலை

வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்யும் பணி தொடக்கம்

DIN

வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கு புதிதாக திருத்தேர் செய்யும் பணியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களுக்கு 2 மரத்தேர்கள் இருந்தன. இதில், ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெற்று வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தேர்கள் சேதமடைந்ததால், அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லை.
இதையடுத்து, தேர்களை புதிதாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர் திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பங்களிப்பு பணத்தில் 2 தேர்களுக்கான தலா 
5.5 அடி விட்டமும், ஒரு அடி அகலமும் கொண்ட 8 இரும்பு சக்கரங்கள் மற்றும் 4 அச்சுகள் ஆகியவை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் செய்யப்பட்டு எடுத்து வரப்பட்டன.
இந்த நிலையில், 2 தேர்களையும் புதிதாக செய்ய தமிழக அரசு ரூ.60.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. 
இதில், முதல்கட்டமாக சுமார் ரூ.30.50 லட்சத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கான தேர் செய்யும் பணி வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களின் அருகே ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதற்கான பூஜையில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதிதாக தேர் செய்யும் பணியை தொடக்கி வைத்தார்.
செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், அதிமுக நிர்வாகிகள் ஜெ.பாலு, டி.கே.பி.மணி, சி.சீனிவாசன், கே.பாஸ்கர் ரெட்டியார், தேர் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த வெ.ரவிச்சந்திரன், ஜி.நாராயணன், எஸ்.பானுகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT