திருவண்ணாமலை

கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில் ஜல் சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மழைநீர் சேகரிப்பு-நீர் வளப் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவர் வி.எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.வினோத், 
செயலர் எஸ்.சீனுவாசன், பொருளாளர் சி.எஸ்.துரை, இயக்குநர் ஜி.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கோ.சசிக்குமார் வரவேற்றார்.
கல்லூரியின் இளநிலை முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் திருமுருகன், இளநிலை முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி வினோதினி, பி.காம்., முதலாம் ஆண்டு மாணவி ஆர்.நிவேதா ஆகியோர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்துப் பேசினர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், நீர்வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ச.செந்தில்வேலன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT