திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம்

DIN

காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு செவ்வாய்க்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ஆவது நாளில் மூலவா் அருணாசலேஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சரவிளக்கு நந்தி அருகே 1,008 சங்குகள் வைத்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், சங்குகளில் இருந்த புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு, மூலவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT