திருவண்ணாமலை

கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், துணைத் தலைவர் எம்.சீனுவாசன், இணைச் செயலர் டி.ஏ.எஸ்.முத்து, கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் டி.செந்தில்குமார் வரவேற்றார். 
திருச்சி பிஷப் ஹெப்பர் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை இணைப் பேராசிரியை எம்.எஸ்.மைதிலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே பேசினார். 
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் யு.உதயகுமார், பி.பாலாஜி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT