திருவண்ணாமலை

மகளிர் குழுக்கள், விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி: மேல்ராவந்தவாடி கூட்டுறவுச் சங்கம் வழங்கியது

DIN

செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மேல்ராவந்தவாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பேரவைக் கூட்டம், சங்க உறுப்பினர்களுக்கு லாப பங்குத் தொகை அளித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவுச் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கச் செயலர் சம்பத் வரவேற்றார்.
பேரவைக் கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு லாப பங்குத் தொகை ரூ.12 லட்சம் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் விவசாயக் கடனுதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடனுதவிகளை சங்கத் தலைவர் செந்தில்குமார் வழங்கிப் பேசினார்.
மேலும், முன்னதாக பலமுறை கடனுதவிகளை பெற்று தவணை தவறாமல் கட்டிய மகளிர் சுய
உதவிக் குழுக்களைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கம் வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் முருகன், சங்க துணைத் தலைவர், சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT