திருவண்ணாமலை

குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கினார்

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்கத்தில் போனஸ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்கத்தில் போனஸ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 95 பேருக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 78 ரூபாய் போனஸ் வழங்கினார்.
இதில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை, பால் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராஜி, குண்ணத்தூர் ஊராட்சிச் செயலர் ஆர்.குமார், பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் எத்திராஜ், கூட்டுறவு சங்கச் செயலர் ஆர்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT