திருவண்ணாமலை

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

செங்கம் வட்டார வள மையத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) அன்பழகி தொடக்கிவைத்தார். இதில், செங்கம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வம், மகேஷ்வரி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சீனுவாசன், ரமணி, முருகன், பெரியசாமி, செந்தில், அண்ணாமலை, அன்புக்கரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், சுத்தம், சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT