மணல் கடத்தல்: 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்
செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 8 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 8 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு வட்டாட்சியர் க.மகேந்திரமணி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் மேனகா, வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் ஆகியோர் தீவிர மணல் கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில்
ஈடுபட்டனர். அப்போது, கொருக்கை கிராமத்தில் சேமந்தல் ஏரியில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 8 மாட்டு வண்டிகளை செய்யாறு வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மாட்டு வண்டிகள் அனைத்தையும் பெரணமல்லூர் காவல் நிலையில் அவர்கள் ஒப்படைத்தனர்.