திருவண்ணாமலை

செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2-வது நாளாக போராட்டம் 

DIN

செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளிதரனை செங்கம் காவல் ஆய்வாளர் தாக்கினாராம். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு புதன்கிழமை ஆட்டோக்களை செங்கம் பேருந்து நிலையம் முன் நிறுத்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
 தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்துங்கள் எனக் கூறி சமரசம் பேசினார். மேலும், முறையாக புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
 அதன் பின்னர், ஆட்டோக்களை பேருந்து நிலையம் எதிரில் விட்டுவிட்டு அமைதியான முறையில் ஒருநாள் முழுவதும் ஆட்டோக்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டம் தொடர்ந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்தனர்.
 புகார் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட எஸ்.பி. சிபி.சக்கரவர்த்தி ஆட்டோக்களை நிறுத்தாமல் ஓட்டுங்கள் விசாரணை செய்து 2 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 6 மணிக்குமேல் ஆட்டோக்களை இயக்கினர்.
 இதனால் இரண்டு நாள்களாக பொதுமக்களும், அரசு அலுவலர்களும், பள்ளிக் குழந்தைகளும் குறித்து நேரத்தில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT