திருவண்ணாமலை

தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

DIN

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி அருகே எஸ்.வி.நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.வாசு தலைமை வகித்தார்.
பிளஸ் 2-வில் வி.தினேஷ், பி.லோகேஷ், ஜெ.யமுனா, பிளஸ் 1-வில் எம்.சந்தியா, நிர்மல், சங்கீதா, பத்தாம் வகுப்பில் எஸ்.ரேகா, எம்.லட்சுமணன், பி.சுப்புலட்சுமி ஆகியோர் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்றனர். முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.3000-ம், இரண்டாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.2000-ம், மூன்றாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.1000-ம்  வழங்கப்பட்டது.
 பரிசுகளை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், எஸ்.வி.நகரம் கூட்டுறவு வங்கித் தலைவருமான ஜி.பாலு வழங்கினார்.   விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் பெ.ஹேமா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிசுபாலன், பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் கோகுல்ராஜ், பொன்னன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT