திருவண்ணாமலை

செங்கத்தில் சிலைகள் செய்யும் பகுதியில் தீ விபத்து

DIN

செங்கத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பகுதியில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலைகளுக்கு பீடம் அமைப்பதற்காக வைத்திருந்த மரக் கட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
 செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் செல்வக்குமார் (35) என்பவர் விநாயகர் சிலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், சிலை செய்வதற்காக பல்வேறு ரசாயனக் கலவைகளை அந்தப் பகுதியில் தீ மூட்டி கொதிக்க வைத்து சிலைகளை உருவாக்குவார்.
 அதேபோல, வியாழக்கிழமை ரசாயனக் கலவையை கொதிக்க வைத்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், விநாயகர் சிலைகளுக்கு பீடம் அமைக்க வைத்திருந்த மரக் கட்டைகளில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், அருகிலிருந்த மற்ற பொருள்கள், தனியார் செல்லிடப்பேசி கோபுரம் ஆகியவை தீ விபத்திலிருந்து தப்பின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT