திருவண்ணாமலை

பறக்கும் படையினர் சோதனை: ரூ. 1.35 லட்சம் பறிமுதல்

DIN

திருவண்ணாமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய திடீர் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 
ரூ. 1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, திருவண்ணாமலையை நோக்கிச் சென்ற மினி லாரி ஒன்றை மடக்கிச் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரம் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், முருகனிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், வீட்டு உபயோகப் பொருள்கள் செய்யும் அவர், வியாபாரம் செய்த வகையில் வந்த பணத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது. இருப்பினும், பறக்கும் படையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT