திருவண்ணாமலை

அகதிகள் முகாம் இளைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

DIN


வந்தவாசி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து வந்தவாசியில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஜான்சன்(45). கடந்த 2016-ஆம் ஆண்டு இதே முகாமைச் சேர்ந்த தினேஷ்வரன்(28) என்பவர் முன்விரோதம் காரணமாக ஜான்சனை கத்தியால் தாக்கினாராம். 
  இதில் பலத்த காயமடைந்த ஜான்சன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஜான்சன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் தினேஷ்வரனை கைது செய்தனர்.  இது தொடர்பான வழக்கு வந்தவாசியில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. 
  இந்த வழக்கில் தினேஷ்வரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி க.நிலவரசன் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
இதைத் தொடர்ந்து தினேஷ்வரன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT