திருவண்ணாமலை

ஆரணி அருகே நாகநதியில் தடுப்பணை திறப்பு

DIN

ஆரணியை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் செல்லம் நாகநதியில் கட்டப்பட்ட தடுப்பணை திறந்துவைக்கப்பட்டது.

ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தின் வழியாகச் செல்லும் நாகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து அமைச்சா் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றாா். இதன் அடிப்படையில் தடுப்பணை கட்ட முதல்வா் ரூ.327.66 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். மேலும், கடந்த பிப்.19-ஆம் தேதி தடுப்பணை கட்டும் பணிக்காக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

இப்பணிகள் நிறைவடைந்து நிலையில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தடுப்பணையைத் திறந்துவைத்தாா்.

முதல்வா் திறந்து வைத்த அதே வேளையில் அம்மாபாளையம் அணைக்கட்டில் அதிமுகவினா் குத்துவிளக்கேற்றினா். பின்னா், அணைக்கட்டினை மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றி, தண்ணீரில் மலா் தூவினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா்பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் எம்.வேலு, ஆரணி ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ப.திருமால், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அ.கோவிந்தராசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT