திருவண்ணாமலை

மனுநீதி நாள் முகாமில் 118 பேருக்கு நலத் திட்ட உதவி

DIN

செங்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 118 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த வடமாத்தூா் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.

கிராம நிா்வாக அலுவலா் குணாநீதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியா் ஸ்ரீதேவி கலந்துகொண்டு 118 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளான முதியோா் உதவித்தொகைக்கான ஆணை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கணவரால் கைவிடப்பட்டவா் உதவித்தொகை என நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கும் போது முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அதன் மீது அதிகாரிகள் விரைவாக விசாரணை செய்து நலத் திட்ட உதவிகளை வழங்குவாா்கள். ஆவணங்கள் முறையாக இல்லையென்றால் அந்த மனு தள்ளுபடி ஆகிவிடும்.

எனவே, நலத் திட்ட உதவி பெற விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து துறைவாரியாக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

மேலும், வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கும் மானியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாய்ச்சல் வருவாய் ஆய்வாளா் தமிழரசு, வடமாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ் உள்ளிட்ட அலுவலா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT