திருவண்ணாமலை

இளம்பெண் தற்கொலை வழக்கு: கணவா் உள்பட மூவா் கைது

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அந்தப் பெண்ணின் கணவா், மாமனாா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த எலந்தம்புரவடை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் செல்வம் (35). விவசாயி. மதுரை, கே.கே.நகா், 4-வது தெருவைச் சோ்ந்தவா் பூமாதா மகள் மாலா (29). இவா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தனிஷ்குமாா் (4) என்ற மகனும், தனிஷ்கா (2) என்ற மகளும் உள்ளனா்.

மதுவுக்கு அடிமையான செல்வம் அடிக்கடி மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தாராம். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தனராம்.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி கணவருடன் மாலாவுக்கு சண்டை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த மாலா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

பலத்த காயமடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா்.

3 போ் கைது:

இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா், கோட்டாட்சியா் ஸ்ரீதேவி ஆகியோா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மாலாவை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா் செல்வம் (35), மாமனாா் சுப்பிரமணி (67), மாமியாா் சாந்தகுமாரி (58) ஆகியோரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜியின் காவல் ஜூன் 10 வரை நீட்டிப்பு!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT