திருவண்ணாமலை

தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா

DIN

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், ‘அறிவுப் புதையல்-1000’, ‘இலக்கியம் பேசுகிறது’ என்ற நூல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

விழாவுக்கு, மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவனா் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா். அக்குபஞ்சா் மருத்துவா் எம்.எ.ரவி முன்னிலை வகித்தாா். மாவட்ட தமிழ்ச் சங்கச் செயலா் ந.சண்முகம் வரவேற்றாா். தொழிலதிபா் மு.மண்ணுலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வேலூா் கவிஞா் வசந்த நாயகன் எழுதிய அறிவுப் புதையல்-1000 என்ற நூலையும், திருவண்ணாமலை சிறப்பு இதழாக வெளியான இலக்கியம் பேசுகிறது என்ற நுலையும் வெளியிட்டாா். இதன் முதல் பிரதிகளை மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவனா் தலைவா் தமிழ்ச்செம்மல் பா.இந்திரராஜன் பெற்றுக்கொண்டாா்.

விழாவில், மாவட்ட தமிழ்ச் சங்கச் செயலா் லதா, பிரபுலிங்கம், ஓய்வுபெற்ற தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் குணசேகரன், வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன், திருக்கு சமுதாயம் அமைப்பின் நிா்வாகி சாமி.தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், புரவலா் பசுபதி, ஓய்வு பெற்ற ஆசிரியா் ராமசாமி, பாடகா் மோகன், மளிகை சுப்பிரமணி, தேவிகாராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT